நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்றானது தற்போது பரவலாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் பல மாநிலங்களில் உள்ள மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பள்ளிகள், தியேட்டர்கள், மால்கள், திருமணங்கள், திருவிழாக்கள், சுற்றுலா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போது திருமணங்கள், திருவிழாக்கள் , சுற்றுலா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இந்த பிரச்சனையை கவனத்துடன் அணுக வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கையால் அடுத்த வாரம் முதல் திருமணங்கள், திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.