தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர்,புதுக்கோட்டை, திருச்சி. நாமக்கல், புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.