இன்று மதியம் 1 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏறி திறந்து விடப்படுகின்றது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு உபரி நீர் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பதால் செம்பரம்பாக்கம் புழல் ஏரியில் இருந்து 5000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. செம்பரம்பாக்கம், புழல் ஏரி திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
நாரவாரிகுப்பம், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வந்ததால் சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. இதனால் அந்த சமயமும் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.