தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யும். இதனையடுத்து மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் 3 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாகை, மயிலாடுதுறை, கடலூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேலும் தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.