இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பான் கார்டு என்பது தனிமனிதனின் மிக முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். இது ஒரு அடையாள ஆவணம் மட்டுமல்லாமல் அனைத்திற்கும் தேவைப்படுகிறது. இதனிடையே ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்களுக்கு நிறைய கால அவகாசம் வழங்கப்பட்டது. இறுதியாக வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி வருகின்ற ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும்.
இதற்கான கால அவகாசம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. அப்படி வருகின்ற ஜூன் 30 ஆம் தேதிக்குள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்காவிட்டால் அந்த பான் கார்டு முடக்கப்பட்டு விடும்.அதனைப்போலவே அபராதம் போன்ற தண்டனையும் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.இதனை செய்ய தவறிய அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பான் கார்டு பொறுத்தவரையில் மற்றொரு பிரச்சனையும் உள்ளது. அதாவது உங்களுடைய பான் கார்டு எண்ணை எங்காவது பதிவு செய்தால் அங்கு பான் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள 10 இலக்க எண்ணையும் மிக கவனமாக நிரப்ப வேண்டும். அதில் ஏதாவது எழுத்துப் பிழை இருந்தால் உங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் மற்றொரு தவறுக்கும் பெரிய தண்டனை கிடைக்கும். அதாவது இரண்டு பான் கார்டுகள் வைத்திருந்தாலும் நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்.
உங்களது வங்கிக் கணக்கு முடக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே நீங்கள் யாராவது இரண்டு பான் கார்டு வைத்திருந்தால் உடனடியாக உங்கள் இரண்டாவது பயன்களை வருமான வரித் துறையிடம் ஒப்படைத்து விடுங்கள். அதற்காக ஒரே விண்ணப்ப படிவம் உள்ளது. நீங்கள் அதனை நிரப்ப வேண்டும். அதற்கு வருமான வரி இணையதளத்திற்கு சென்று அதில் ‘changes or correction in PAN Data’என்பதை கிளிக் செய்து அதன்கீழ் நீங்கள் இந்த வேலையை முடித்துவிடலாம்.