Categories
மாநில செய்திகள்

BIG ALERT: உருவாகும் புதிய புயல்…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் அந்தமான் அருகில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று வடக்கே நகரும் என்றும், ஆந்திரா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்கக்கடலில் அந்தமான் அருகில் அடுத்த வாரம் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதுகுறித்து இன்னும் சில நாட்களில் தெரியவரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |