Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: எஸ்பிஐ வாடிக்கையாளர்களே…. இந்த மெசேஜ் வந்தால் உடனே டெலிட் பண்ணிடுங்க….!!!!!

நீங்கள் எஸ்பிஐ அக்கவுண்ட் ஹோல்டராக இருப்பின் மோசடி நபர்களின் இலக்கில் சிக்கி பணம் அல்லது உங்களது தனிப்பட்ட விபரங்களை அவர்கள் திருட நேரிடலாம். இதனால் மோசடி செய்பவர்கள் பணம் மற்றும் தனிப்பட்ட விபரங்களைத் திருட பயன்படுத்தி வரும் புதிய மோசடி முறை தொடர்பாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க கொள்கைகள், திட்டங்கள், முன் முயற்சிகள் மற்றும் சாதனைகள் குறித்த தகவல்களை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு வழங்கும் பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ (PIB – Press Information Bureau), SBI யூஸர்கள் இந்த புதிய SMS மோசடியில் சிக்காமல் இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அவர்களுடைய SBI அக்கவுண்ட் பிளாக் செய்யப்பட்டுள்ளது என வரும் மெசேஜில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்குமாறு PIB அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் மோசடி செய்வதற்காக காத்திருக்கும் நபர்கள் இந்த அலெர்ட் டைப் மெசேஜ்களை SMS வாயிலாக அனுப்புவதாகக் கூறப்படுகிறது. அத்துடன் இது போன்ற மெசேஜ்கள் அல்லது கால்ஸ்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற மெசஜ்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் எவ்வித லிங்க்ஸ்களையும் கிளிக்செய்ய வேண்டாம் எனவும் PIB எஸ்பிஐ வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

இதுகுறித்த ட்விட்டில் PIB கூறியிருப்பதாவது, உங்கள் எஸ்பிஐ அக்கவுண்ட் பிளாக் செய்யப்பட்டு இருப்பதாக புழக்கத்திலுள்ள ஒரு மெசேஜ் போலியானது (A message in circulation claiming that your @TheOfficialSBI account has been blocked is #FAKE) என கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதே ட்விட்டில் உங்களின் தனிப்பட்ட (அல்லது) வங்கி விவரங்களை ஷேர் செய்யுமாறு கேட்கப்படும் மின்னஞ்சல்கள்/எஸ்எம்எஸ்-களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆகவே அதுபோன்ற மோசடி செய்யும் நோக்கில் உங்களுக்கு ஏதேனும் மெசேஜ்கள் (அல்லது) இமெயில்கள் வந்தால் உடனே [email protected] என்ற இ-மெயில் ஐடி-க்கு புகாரளிக்கவும் எனவும் குறிப்பிட்ட எச்சரிக்கை ட்விட்டில் PIB தெரிவித்திருக்கிறது. மோசடியில் ஈடுபடுபவர்கள் போலி பேங்க் மெசேஜ்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை தங்களது தனிப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக கவர்ந்து, ஏதேனும் தீங்கிழைக்கும் லிங்க்ஸ்களை கிளிக்செய்ய வைக்கிறார்கள் எனவும் PIB தெரிவித்துள்ளது. PIB ட்விட்டில் மோசடி செய்பவர்கள் அனுப்பிவரும் மெசேஜ் பற்றிய ஸ்க்ரீன் ஷாட் ஒன்றையும் ஷேர் செய்துள்ளது.

அவற்றில் “அன்புள்ள வாடிக்கையாளரே உங்களது எஸ்பிஐ வங்கியின் ஆவணங்கள் காலாவதியாகிவிட்டது. இதனால் விரைவில் உங்களது அக்கவுண்ட் பிளாக் செய்யப்படும்.தற்போது http://sbikvs.II கிளிக்செய்து நெட் பேங்கிங் வாயிலாக உங்கள் ஆவணங்களை அப்டேட் செய்யவும்” என்று கூறப்பட்டிருக்கிறது. இதனிடையில் உங்களது தனிப்பட்ட அல்லது அக்கவுண்ட் விபரங்களை வங்கி ஒருபோதும் கால்ஸ் மற்றும் மெசேஜ்கள் வாயிலாக கேட்காது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். இதுபோன்ற போலி மெசேஜ்களை முடிந்தவரை ஓபன் செய்யாமல் உடனே டெலிட் செய்வது (அல்லது) மெசேஜை பார்த்துவிட்டால் கூட டெலிட் செய்வது சிறந்த நடவடிக்கை எனவும் PIB குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |