தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீர் திறக்கப்படுகிறது. ஒரு லட்சம் கன அடிக்கு அதிகமாக வெளியேறும் நீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடகடவென உயர்ந்து வருகிறது. 120 அடி கொண்ட மேட்டூர் அணை இன்று 109.5 அடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தொடர் கன மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு 64.997- லிருந்து 79,783 கன அடியாக அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து 34,875 கன அடி, கே ஆர் எஸ் அணையில் இருந்து 44,908 கன அடி திறக்கப்படுகிறது. இதையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.