உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் அது தொடர்பாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. உலகில் அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், பிரான்ஸ்,ஜெர்மனி மற்றும் இத்தாலி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய் தீவிரமாகப் பரவி வருகிறது. அது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையை பின்பற்றி மத்திய அரசு தற்போது புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி தனிமைப் படுத்துதல், பரிசோதித்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதிப்பு குறித்த ஆய்வு போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். மேலும் சர்வதேச நாடுகளின் பயணிகள் நோய்வாய்ப்பட்டவர்களிடமிருந்தும், விலங்குகளிடம் இருந்தும் விலகி இருக்கும் வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.