நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடிந்துவிடவில்லை. மூன்றாவது அலை வரும் மாதங்களில் எழும் என்று கூறப்பட்ட நிலையில், கொரோனா எத்தனை அலைகள் வந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை என மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். சில மாநிலங்களில் இப்போதே சிறிய அளவிலான எண்ணிக்கை கூடி இருப்பதும் மூன்றாவது அலையின் தொடக்கமாகவே கருதலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.