இந்தோனேசியாவில் 7.6 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் காரணமாக புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதாலும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும் அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை சாலையில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சென்னைக்கு இதுவரை எந்த சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.