வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை சென்னை அருகே கரையை கடந்தது. கரையை கடந்தாலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து சில மணி நேரம் நீடிக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வடதமிழக கடலோரம் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிக கனமழைக்கும், ஈரோடு, சேலம், குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது .