அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 18ஆம் தேதி சென்னைக்கு அதிகனமழைக்கான அதாவது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது சென்னையை நெருங்கும் போது சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதனால் நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.