தமிழகத்தில் கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அரசு புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை ஜனவரி 10-ஆம் தேதி வரை நீடித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 மடங்கு அதிகரித்துள்ளது. தொற்று கண்டறியப்பட்ட 5-க்கும் மேற்பட்ட தெருக்களில் தடுப்பு வேலிகள் அமைத்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது சென்னையில் மொத்தம் 39,537 தெருக்கள் இருக்கின்றது. இதில் 1,158 தெருக்களில் கொரோனா பாதிப்பு உடையவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அதிகளவாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 228 தெருக்களில் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.