Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: ஜூன் 1 முதல் ரூ.1000 அபராதம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஜூன் மாதம் இறுதிக்குள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுடன் இணைக்க கூடுதலாக 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். வரி செலுத்துவோர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 3 மாதங்களுக்கு 500 ரூபாய் செலுத்த வேண்டும்.

ஜூலை 1 ஆம் தேதி முதல் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைப்பிற்கு ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு 2023 மார்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பவர்கள்(ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை) 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இந்தத் தொகை அடுத்த மாதம் முதல் இரட்டிப்பாக மாறி ஆயிரம் ரூபாய் செலுத்த நேரிடும்.

ஆதார் கார்ட் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கு முதலில் வருமான வரி செலுத்தும் இணையதளத்திற்கு https://www.incometaxindiaefiling.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில் உங்களுடைய பான் கார்டு எண் வைத்து உள்நுழைய வேண்டும்.

அதன்பிறகு ஆதார் மட்டும் பயன் கார்டு இணைப்பு என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

பிறகு உங்களுடைய ஆதார் எண்ணை பதிவிட்டு இணைக்க வேண்டும்.

Categories

Tech |