தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் அடுத்து வரும் மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் மே மாதம் இறுதிவரை 2548 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.