தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யும். இதனையடுத்து மழை குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 59 சதவீதம் அதிக மழை பதிவாகி உள்ளது. அக்டோபர் 1 முதல் டிசம்பர் 20 வரை இயல்பான மழை அளவான 45 செ.மீ-க்கு பதில் 71 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 119 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சை ,திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நாளை கடலோர மாவட்டங்களில் ஏராளமான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். [அதன்பின் புதுச்சேரி காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.