Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட்….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது தெற்கு வங்க கடல் பகுதியில் இலங்கையை ஒட்டிய தமிழக கடலோரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகள் அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்நிலைகள் நிரம்பியதால் உபரி நீர் தெருக்களில் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலனைக் கருதி இன்று இருவத்தி ஏழு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  இதனால் அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், நாமக்கல், கரூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவாரூர் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி நவம்பர் 29 வரை ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |