நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது அதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், 15, 16 தேதிகளில் சேலம், தர்மபுரி, தேனி. நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை பெய்வதால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ந்த நிலை உருவாகும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.