தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் தற்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா கிளஸ்டர் பரவுகிறது என்று மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். BA4 தொற்று உறுதியான நிலையில், சென்னையில் மக்கள் கவனக் குறைவாக உள்ளனர்.
இனிவரும் நாட்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பொது சுகாதாரத்துறை வழிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.