தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த ஒரு சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் தற்போது மழை பெய்து வருவது சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ராமநாதபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே இடி மின்னலின் போது டிவி, மிக்ஸி, கணினி, செல்போன் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மக்கள் அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் அருகே செல்வதோ, தொடுவதோ கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.