பேருந்துகளை உரிய பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டுமென்று தமிழக போக்குவரத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக போக்குவரத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்தை நிறுத்த வேண்டும். நிறுத்தத்தை தாண்டியோ அல்லது சாலை நடுவிலோ அரசுப் பேருந்துகளை நிறுத்தக்கூடாது.
மேலும் பேருந்து நிறுத்தம் தாண்டி நிறுத்துவதால் பயணிகள் ஓடிவந்து பேருந்தில் ஏறுவதற்கு சிரமப்படுகிறார்கள் எனவும், அப்படி ஓடி வந்து பயணிகள் ஏறுவதால் கீழே விழுந்து காயங்கள் ஏற்படும் சூழ்நிலையும் சில நேரங்களில் மரணங்கள் தொடர்பான விபத்துகளும் ஏற்பட காரணமாகிறது. எனவே அனைத்து ஓட்டுநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் மட்டுமே பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.