Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழக மக்களே உஷார்…. 5-ல் ஒருவருக்கு…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் 10 சதவீதம் பேருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதனால் போதிய விழிப்புணர்வு அவசியம் என்ற பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் ஐந்தில் ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு ஏற்படும் ஆபத்து இருப்பதாக பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. பிப்ரவரி மாதம் மாநிலம் முழுவதும் 177 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர் கள் மற்றும் பெரியவர்களிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் நீரிழிவு போன்ற இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் சிறுநீரக பரிசோதனை செய்து கொள்வதோடு தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 4,741 பேரின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் 455 பேருக்கு கிரியேட்டிணின்,276 பேருக்கு அல்புமின், 367பேருக்கு ரத்த அணுக்கள் அளவுக்கு அதிகமாக கலந்து இருந்தது.

அதாவது ஐந்தில் ஒருவருக்கு மேற்கண்ட பிரச்சனைகளில் ஒன்றாக இது உள்ளது. எனவே உடனே சிறுநீரக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சிறுநீரகங்கள் தொடர்பான நோய்களின் பாதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் பலருக்கு சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு இருக்கிறது என்பதே தெரியவில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் கட்டாயம் சிறுநீரக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |