வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் இன்று (மார்ச்.5) திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதையடுத்து மன்னார் வளைகுடா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழக மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோரத்தில் உள்ள மீன்பிடி படகுகள் மற்றும் வணிகர்கள் உடனடியாக அருகில் உள்ள துறைமுகத்துக்கோ, கரையோரத்துக்கோ திரும்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.