வங்கக்கடலில் உருவான அசானி புயல் தீவிர புயலாக மாறியதையடுத்து சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் அசானி புயல் தற்போது மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
தொடர்ந்து வடக்கு ஆந்திரா – ஒடிசா இடையே புயல் நாளை கரையை கடக்கிறது. இந்நிலையில் அசானி’ புயல் தீவிர புயலாக மாறியது. இதனால் சென்னை, கடலூர், நாகை, பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.