வங்கக்கடல் பகுதியில் உருவாகியிருக்கின்ற ஜாவத் புயல் இன்று ஒடிசாவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. மேலும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஜாவத் புயல் வடக்கு ஆந்திரா- ஒடிசா இடையே இன்று காலை நகர தொடங்கியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய மேற்கு கடலோரப் பகுதிகளில் காற்று 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வங்கக்கடல் பகுதியில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.