இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.
அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையில் இளம் வயதினருக்கு ஹாப்பி ஹைபோக்சியா என்ற புதிய வகை வியாதி பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். புதிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் ரத்த ஆக்சிஜன் அளவு குறைவது தெரியாது. இதனை கவனிக்காமல் விட்டால் மரணம் அளவிற்கு கூட சென்றுவிடும். ரத்தத்தில் 95 சதவீதத்திற்கு மேல் ஆக்சிஜன் இருப்பது ஆரோக்கிய நிலை. ஆனால் புதிய வியாதியால் ஆக்சிஜன் 40 சதவீதத்துக்கு உடனே இறங்கி விடுகிறது என கூறியுள்ளனர்.