Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: பான் கார்டில் மிகப்பெரிய ஆபத்து…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதனால் நிறைய பேர் தங்களது பணத்தை இழந்துள்ளனர். வங்கிக் கணக்கு விவரங்களை திருடி அதன் மூலமாக வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடுகின்றனர். இதில் வங்கிகள் தரப்பில் இருந்து தொடர்ந்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் மோசடிகள் அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் பான்கார்டு விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. அதாவது எஸ்எம்எஸ் அல்லது ஈமெயில் மூலமாக யாராவது பேன் கார்டு அப்டேட் செய்யும்படி கேட்டால் அதனை யாரும் நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுவாக பான் கார்டு மோசடி என்பது வாடிக்கையாளரின் மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் ஒன்றை அனுப்பி அதில் உள்ள லிங்கை கிளிக் செய்யும் படி கேட்கப்படும்.

அதில் பேன் கார்டு உள்ளிட்ட தனிநபர் அடையாள ஆவணங்களை அப்டேட் செய்யும்படி கேட்டு அதன் மூலமாக உங்களது பணத்தை திருடி விடுவார்கள். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த விஷயத்தில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். அதனைப்போலவே ஓடிபி நம்பர் யாரிடமும் பகிர கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எச்டிஎஃப்சி வங்கி மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் ஆன்லைன் மோசடி விஷயத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பை எச்சரிக்கை செய்துள்ளது.

Categories

Tech |