Categories
உலக செய்திகள்

Big Alert: புதிய வகை கொரோனா… 2023க்குள்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வராத நிலையில் கொரோனா வைரஸில் மரபணு மாற்றம் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உருமாறிய கொரோனா பரவிவருகிறது. தற்போது பரவும் தொற்று டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா வகை வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் ஒரு புதிய வகை கொரோனா மாறுபாடு இந்த ஆண்டு குளிர் காலத்தில் உருவாகும் என்றும் பிரான்ஸ் நிபுணர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரான்ஸ் நாட்டு அரசின் விஞ்ஞான கவுன்சிலின் தலைவர் ஜூன்-பிரான்கோயிஸ் டெல்ப்ரைசி கூறியதாவது: டெல்டா வகை மாறுபாட்டால் நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதுவும் இந்த குளிர்காலத்தில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா மாறுபாடு உருவாக சாத்தியம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் விளைவுகளை தற்போது கணிக்க முடியாது. இருப்பினும் மக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிவதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இது இயல்புநிலை திரும்புவதற்கு 2022 அல்லது 2023 ஆண்டு வரை ஆகலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |