Categories
மாநில செய்திகள்

BIG ALERT: புதுசா ஒன்னு தமிழகத்தை நோக்கி வருது…. உச்சக்கட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன்பிறகு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து சென்னை அருகே கரையைக் கடந்தது பெரும்பாலான இடங்களில் இடைவிடாது கனமழை பெய்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். தற்போது கடந்த இரண்டு நாட்களாக ஓரளவு மழை குறைந்துள்ள நிலையில், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நவம்பர் 25ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |