நாடு முழுவதும் நடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலருக்கும் காலரா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 700க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அசுத்தமான குடிநீர்,சுகாதாரமற்ற சூழ்நிலை மற்றும் மழைக்காலத்தில் தொடக்க உள்ளிட்ட காரணங்களால் பல இடங்களில் இந்த பிரச்சனை தலைதூக்க தொடங்கியுள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.