Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: போலி ஆதார் அட்டைகள் புழக்கம்…. மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது ஆதார் அட்டைகளின் நம்பகத்தன்மை குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. போலி ஆதார் அட்டைகளின் வழக்கு தற்போது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று நாட்டின் முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. வங்கி கணக்கு மற்றும் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். அதனுடன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கப்பட வேண்டும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் போலி ஆதார் அட்டை வழக்குகள் அதிகரித்துள்ளதால் குற்றங்கள் மீண்டும் அதிகரிக்க வழிவகுக்கும் என்று அரசு கவலை தெரிவித்துள்ளது. அதாவது ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக மாறும்போது அதை பொறுத்து மோசடிக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. ஆதார் அட்டையை நம்பகத்தன்மை குறித்து அரசு கவலை தெரிவித்தது இதற்காகத்தான்.

இந்நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தீர்க்கமான அறிவுரைகளை வழங்கியுள்ளது. மேலும் குடிமக்கள் ஆதாரை சரியான முறையில் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு ஆதாரம் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. எந்த ஒரு நபரின் ஆதார் அட்டையையும் ஏற்றுக் கொள்வதற்கு முன்பு அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. அனைத்து அரசு துறைகளும் ஆதார் அட்டைகளை அடையாள அட்டையாக ஏற்றுக் கொள்வதற்கு முன்பு அவற்றின் நம்பகத் தன்மையை சரிபார்க்க வேண்டும்.

ஆதார் அட்டையில் நம்பகத்தன்மையை சரிபார்க்க மிகவும் எளிதானது. கியூ ஆர் குறியீடு ஸ்கேனர் மூலம் சரி பார்க்கலாம். கியூ ஆர் ஸ்கேனர் IOS, Android, Windows சார்ந்த சாதனங்களில் கிடைக்கிறது. இதனுடன் ஆதார் அட்டை தொடர்பான தேவையான தகவல்களின் சரியான பயன்பாடு குறித்து குடிமக்கள் விழிப்புடன் இருக்கவும்,ஆதார அமைப்பு பரிந்துரைத்த செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றை முழுமையாக பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் தங்கள் ஆதார் அட்டையை சரிபார்த்துக் கொள்வது நல்லது.

Categories

Tech |