Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: மக்களே ..! இந்த தினத்தில் வங்கிகள் இயங்காது….. முக்கிய அறிவிப்பு….!!!!!

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதிய முறையை மாற்றி அமைக்க வேண்டும் எனவும், அதில் உள்ள சில ஓய்வூதிய முறைகளில் திருத்தம் செய்ய வேண்டுமெனவும், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை பழையபடி அமல்படுத்த வேண்டும் எனவும், வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பணி இருக்க வேண்டும். அதாவது வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயமாக விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளனர்.

அதாவது, ஐக்கிய வங்கி யூனியன் கூட்டமைப்பு (யுஎப்பியூ), 9 வங்கியூனியன்களைக் கொண்ட அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (ஏஐபிஓசி), அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (ஏஐபிஇஏ), தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு (என்ஓபிடபிள்யு) என அனைத்து வங்கி ஊழியர்களும் வரும் ஜூன் 27ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். நாடு முழுவதும் உள்ள கிட்டத்தட்ட ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கி ஊழியர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளும் வரைக்கும் இந்த போராட்டம் நீடிக்கும் எனவும் ஊழியர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதால் ஜூன் 27ஆம் தேதி வங்கி பணிகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும். மேலும், ஜூன் 27ஆம் தேதி வங்கி தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் அனைவரும் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது மிகப் பெரிய அளவில் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |