நாடு முழுவதும் வருமானவரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்று முடிவடைவதால் நாளை முதல் 10,000 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தின் ஜூலை மாதத்திற்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நவம்பர் மாதம் வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு டிசம்பர் வரையில் நீட்டிக்கப்பட்டு இருந்தது. இருந்தாலும் பொதுமக்கள் மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் விடுத்தனர். அதனால் மக்களின் கோரிக்கைக்கு இணங்க வருமான வரி அலுவலகம் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 2019-2020 நிதியாண்டுக்கான வருமான வரியை, அபராதம் என்று கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இன்று கணக்கு தாக்கல் செய்யாத 5 லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டுவோர் 10 ஆயிரம் அபராதம் செலுத்தி நாளை முதல் கணக்கு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் இன்று தாக்கல் செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் நாளை பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும்.