இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைய அடைய பல்வேறு மோசடிகளும் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சிலர் தங்களுடைய பணத்தை இழந்து வருகின்றனர். இது போன்ற மோசடிகளை தவிர்ப்பதற்காக வங்கிகள் சார்பாகவும் அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் புதுக்கோட்டை, தூத்துக்குடி, செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பூர் ஆகிய மாவட்ட ஆட்சியரின் பெயர்கள் சமூக வலைதளங்களில் போலி கணக்கு தொடங்கி வடமாநில கும்பல் ஒன்று மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது.
எனவே சமூக வலைதளங்கள் மூலமாக இந்த தகவலை தெரிவித்தாலும் யாரும் நம்ப வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழக போலீசாருக்கு சவால் விடும் நோக்கில் அரங்கேறி வரும் இந்த குற்றங்களை தடுக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.