தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அது மட்டுமல்லாமல் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ஆறு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம்,தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், திருச்சி மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.