தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளா மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.ஏற்கனவே அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வட தமிழகம் நோக்கி நகர்ந்து வரும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வால் மீண்டும் தமிழகத்திற்கு அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.