காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அக்டோபர் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் அதன் எதிரொலியாக சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால், 2ஆவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால், காவிரிக் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.