இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு ஏற்படும் பணம் மோசடியைத் தடுப்பதற்காக வங்கிகள் சார்பாக அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களின் பணம் பெருமளவில் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்நிலையில் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்து பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என்று தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக எஸ்பிஐ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், QR கோடை ஸ்கேன் செய்வதற்கு முன் யோசியுங்கள். தெரியாத, சரிபார்க்கப்படாத QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் #SAFEWITHSBI உடன் இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.