இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பொதுமக்களை பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்க அல்லது விற்கலாம் என்ற போலியான விஷயங்களுக்கு பலியாகிவிடக்கூடாது என்று எச்சரித்துள்ளது.
ரிசர்வ் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வங்கியின் பெயர் மற்றும் சின்னத்தை தவறாக பயன்படுத்துகிறது. மேலும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் நாணயங்கள், பழைய ரூபாய் நோட்டுக்களை விற்குமாறு வலியுறுத்தி வருவதாகவும், கட்டணங்கள், கமிஷன்கள் அல்லது வரிகள் வசூலிக்கப்படுகிறதாகவும் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் கட்டணங்கள் மற்றும் கமிஷன்களை ரிசர்வ் வங்கி கேட்பதில்லை என்றும் பொதுமக்கள் இது போன்ற ஏமாற்று தனமாத விஷயங்களுக்கு யாரும் பழியாக வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்தது உள்ளது. இதனைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி தனி நபருக்கோ, வணிகத்திற்கோ, நிறுவனங்களுக்கோ, கட்டணமோ அல்லது கமிஷன்களோ வாங்கும் அதிகாரத்தை வழங்கவில்லை என்று கூறியுள்ளது.