கோவை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் சமீரன். இவரின் பெயரில் போலியான வாட்ஸ்அப் கணக்கு தொடங்கிய மர்ம நபர்கள் அவரது நண்பர்களுக்கு அமேசன் கிப்ட் கூப்பன் மூலம் பணம் அனுப்ப குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளனர். தனது பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு இருந்ததை அறிந்த சமேரன் உடனடியாக சமூக வலை தளத்தில் பதிவிட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து சைபர் பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பெயர் புகைப்படத்தை பயன்படுத்தி போலி வாட்ஸ்அப் கணக்கு தொடங்கப்பட்டு மோசடியில் சிலர் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.