வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் கனமழை தொடரும் எனவும் சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னையில் 30 மணி நேரமும், திருவள்ளூரில் 48 மணி நேரமும் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.