வரி சேமிப்பு திட்டங்கள் டெபாசிட் செய்வதற்கு மார்ச் 31ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைகிறது.
நடப்பு நிதி ஆண்டில் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடியும் நிலையில், வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வோர் கடைசியில் குறைந்தபட்ச டெபாசிட் தொகையை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் கணக்கு செயலற்றுப் போய்விடும் செயலற்றுப் போன கணக்கை மீண்டும் சிறிது கடினமான வேலை. மேலும் இதற்காக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இதனை தவிர்க்க வேண்டுமெனில் மார்ச்சு 31ஆம் தேதிக்குள் குறைந்தபட்ச தொகையை செலுத்தி கொள்ளலாம்.
1. பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund):
இத்திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். டெபாசிட் தொகையை செலுத்துவதற்கான கடைசி தேதி மார்ச் 31ஆம் நாள். உரிய தேதிக்குள் டெபாசிட் செய்யாவிட்டால் ஆண்டுக்கு 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
2. தேசிய பென்சன் திட்டம் (National Pension System):
தேசிய பென்சன் திட்ட கணக்குதாரர்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். டெபாசிட் செலுத்தாவிட்டால் கணக்கு செயலற்றுப்போகும். பின்னர் கணக்கை புதுப்பிக்க 100 ரூபாய் செலுத்த வேண்டும்.
3. செல்வமகள் சேமிப்புத் திட்டம்:
சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 250 ரூபாய் குறைந்தபட்சமாக டெபாசிட் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் டெபாசிட் தொகை செலுத்தாவிட்டால் கணக்கு செயலற்றதாகிவிடும்.