இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர வளர மக்கள் அதிக அளவில் இணையத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். எனவே ஆன்லைன் மூலமாகவே பண பரிமாற்றங்களை செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் மோசடிகளும் அதிகரிக்க தொடங்கி விட்டது. எனவே இது போன்ற மோசடிகளை தடுப்பதற்கும், வாடிக்கையாளர்கள் மோசடிகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் அந்தந்த வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது இது குறித்து எச்சரிக்கை செய்திகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் எஸ்பிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக எஸ்எம்எஸ் அல்லது செல்போன் அழைப்பு வந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம் எனவும், ஏதேனும் லிங்க் இருந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மோசடியைத் தடுப்பதற்காகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.