நாட்டில் கடந்த சில மாதங்களாக மோசடி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதிலும் குறிப்பாக ஹேக்கர்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக் செய்யும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கூகுள் குரோம் மற்றும் மொசில்லா பிரவுசரின் சில வேர்ஷன்களில் பாதுகாப்புகளை மீறி ஹேக்கர்கள் ஊடுருவி உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. பயன்பாட்டாளர்களின் இமெயில், இணையத்தளங்கள் மற்றும் ஆன்லைன் கணக்குகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஹேக்கர்கள் திருட கூடும். எனவே லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் பயனர்களுடன் குரோம் மற்றும் மோசில்லாவை அப்டேட் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
Categories