தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மூன்றாவது அலை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக வும், முதல்வருடன் ஆலோசனை செய்த பிறகு இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைப்பார் என்றும் கூறியுள்ளார்.