Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: “Double Mutant Variant”…. அரசு உச்சக்கட்ட பரபரப்பு அறிவிப்பு… மக்களே உஷார்….!!!

இந்தியாவில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.

அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு தற்போது வரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள்.

இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் இன்று பாதிப்பு அதிகரித்து உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் உருமாறிய கொரோனா வைரஸ் பெரும்பாலான நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் மரபான மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பிய அவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸை சுகாதாரத்துறை அமைச்சகம் ” Double Mutant Variant” என வகைப்படுத்தியுள்ளது. மேலும் மரபணு மாறிய குறித்த ஆய்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கொரோணா குறித்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது

Categories

Tech |