சென்னையில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதாலும் அதிக கனமழை பெய்யும் என்பதாலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நேற்று வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே நிலை கொண்டுள்ளது.அது சில மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கு வடதமிழகம் பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புயலை போன்று காற்றழுத்த தாழ்வு மண்டலத்துக்கு கண் இல்லாததால் நகர்வு திசையை துல்லியமாக கணிக்க இயலாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும்.