Categories
சினிமா தமிழ் சினிமா

“பிகில் ஆடியோ லான்ச்” சமூக பிரச்சனைய பாருங்க நண்பா… வைரலாகும் தளபதியின் குட்டி கதை…!!

இன்று சென்னையில் நடைபெற்ற பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசிய குட்டி கதை சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு என்பது  கிடைத்துள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி நம்பர் 1 இடத்தை பிகில் ஆடியோ லான்ச் பிடித்துள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 1 மில்லியன்க்கும் மேல் ட்விட்கள்  பதிவு செய்யப்பட்டு உள்ளன. பிகில் ஆடியோ லான்ச்க்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பதற்கு காரணம் விஜயின் குட்டி கதை தான். ஆம் நடிகர் விஜய் தனது படத்தின் ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு குட்டி கதை சொல்லி ரசிகர்களை ஆரவாரபடுத்துவார்.

Image result for bigil audio launch vijay speech

அதே போன்று பிகில் இசை வெளியீட்டு விழாவிலும் குட்டிக்கதை கூறுவார் என்றும்  அவரது பேச்சை கேட்கவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். அதேபோல் அசத்தலான குட்டி கதை ஒன்றை தளபதி விஜய் பேசியுள்ளார். அதில், தன் ரசிகர்கள் தனக்கு நேரும் பிரச்சனைகளை கவனத்துடன் கையாள வேண்டும் என்றும், சமூகவலைதளங்களில் சண்டை போடுவது, நேரம் செலவிடுவது, போன்ற வெட்டி வேலைகளை தவிர்த்து விட்டு நம்மைச் சுற்றியுள்ள சமூக பிரச்சனைகள் பார்த்து அதற்கான தீர்வினை காண முன்வர வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். இவரது பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |