பிக்பேஷ் லீக் டி20 போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக பாகிஸ்தான் வீரர் சதாப் கான் ஒப்பந்தமாகியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் அந்த அணிக்காக 67 டி20 போட்டிகளில் விளையாடி 73 விக்கெட் கைப்பற்றி உள்ளார் .அதோடு சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய அவர் 9 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் .இந்த நிலையில் ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக் கிரிக்கெட் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணியில் சதாப் கான் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதனிடையே இவர் மீதமுள்ள பிபிஎல் போட்டியில் விளையாடுவார் என சிட்னி சிக்சர்ஸ் அணி உறுதிப்படுத்தியுள்ளது .இதற்கு முன்னதாக இவர் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக 2 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.